நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த அன்னார்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்த ராஜ், கோமதி தம்பதியினர். கோவிந்தராஜ் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தேஜ ஸ்ரீ, மௌலி என இரு மகள்கள் இருந்தனர். வீட்டில் வண்ணம் பூசும் வேலை நடைபெற்றுள்ளது. அதற்காக பெயிண்ட், தின்னர் உள்ளிட்டப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தண்ணீர் என நினைத்து இருவரும் தின்னரை எடுத்து குடித்துள்ளனர். தின்னரை குடித்ததைத் தொடர்ந்து இருவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டனது. இதனைத் தொடர்ந்து குழற்தைகள் இருவரும் உடனடியாக பள்ளிப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து வீடியோ பார்த்தபோது விபரீதம்; செல்போன் வெடித்து சிறுமி பலி
பள்ளிப்பாளையம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இரு குழந்தைகளும் ஈரோடு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்று 3 வயது குழந்தையான தேஜ ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து 5 வயது குழந்தையான மௌலி கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்ஸ்டா காதலால் சீரழிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி; 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தின்னர் குடித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.