நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 65). தச்சு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சிந்தாமணி (56). இவர்களுக்கு நந்தகுமார் (36), கோபி (26) என 2 மகன்கள் இருந்தனர். இளைய மகன் கோபி திண்டுக்கல்லில் தச்சு தொழில் செய்து வருகிறார்.
மூத்த மகன் நந்தகுமார் திருமணமாகாத நிலையில் தனது பெற்றோருடன் தங்கியிருந்து தச்சு தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கியதால் 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொழிலில் போதிய வருமானம் இல்லாததாலும், மருத்துவ தேவைக்காகவும் அதிக அளவில் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
undefined
பரமக்குடி அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார், வேன், லாரி; 15 பேர் படுகாயம்
இதனால் குடும்பத்தில் இருந்த 3 பேரும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடேசனை பார்ப்பதற்காக பக்கத்துவீட்டு பெண் ஒருவர் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நடேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளனர்.
நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தி; நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தி தாய், மகன் தற்கொலை
அப்போது நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் என 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய ஆய்வில் வீட்டில் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் கிடையாது.
கடன் தொல்லை மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். கடிதத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.