இரட்டை மடி வலையை பயன்படுத்திய காரைக்கால் மீனவர்கள்; நாகை மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jan 14, 2023, 12:48 PM IST

அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் காரைக்கால் மீனவர்களை கடலுக்குள்ளேயே சிறைபிடிக்க வேண்டும் என்று ஒன்று கூடிய நாகை மீனவர்களால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.


சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்திள்ளது. இந்த நிலையில் சில மாவட்ட  மீனவர்கள் சுருக்குமடி, இரட்டை மடி வலைக் கொண்டு மீன் பிடிப்பதாகவும், இதனால் சிறு படகு மீனவர்கள், கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 30 மேதி கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் அவசர கூட்டம் நடத்தி இனி இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாடது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

 திருச்சியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

Latest Videos

undefined

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைக் கொண்டு இரவு நேரங்களில் மீன் பிடிப்பதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நாகை துறைமுகத்தில் திடீரென மீனவர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் காரைக்கால் மாவட்ட மீனவர்களை படகோடு சிறைபிடித்து நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து கடலில் உள்ள மீனவர்களை சிறைபிடித்து கரைக்கு அழைத்து வருவதற்காக கடலுக்கு செல்ல தயாரானதால் பரப்பரப்பு ஏற்பட்டது. 

கோவில்பட்டியில் உதவி ஆய்வாளருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்

கடலுக்குள் மீனவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்பதால் நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், கடரோல காவல் படை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நாகை மீனவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

click me!