நாகப்பட்டிணம் தலைஞாயிற்றில் 5 நாட்களுக்குத் 144 தடை உத்தரவு: இரு பிரிவினரிடையே மோதல் அச்சம்! போலீஸார் குவிப்பு

By Pothy Raj  |  First Published Dec 6, 2022, 10:53 AM IST

நாகப்பட்டிணம் மாவட்டம், தலைஞாயிற்றில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதையடுத்து, 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்டநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


நாகப்பட்டிணம் மாவட்டம், தலைஞாயிற்றில் இரு பிரிவினருக்கும் இடையே  மோதல் ஏற்படும் சூழல் நிலவியதையடுத்து, 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்டநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தலைஞாயிறு ஊராட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது, அந்த நேரத்தில் போலீஸார் வந்து தடியடி நடத்தி கலவரம் பெரிதாகமல் தடுத்தனர்.

Latest Videos

undefined

திமுகவிற்கு எதிராக போராட்டம்..! அதிமுக தொண்டர்களுக்கு தன் கையாலயே உணவு சமைத்த ஆர்.பி.உதயகுமார்

இந்நிலையில் தலைஞாயிறு கிராமத்தில் இன்று அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிகோரினர். 

இந்நிலையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகம் திறக்க இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது, அன்றைய தினம் அம்பேத்கர் படத்துக்கு அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கக்கூடாது என்று கோரியிருந்தார்கள். 

இதையடுத்து, மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா தலைமையில் இரு பிரிவினரையும் அழைத்து பேச்சு நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

தமிழகத்தை மிரட்டும் புயல்..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

இருசமூகத்தினருக்கும் அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், சமூகநல்லிணத்தைக் குலைக்கும் என்று மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கோட்டாச்சியரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைஞாயிறு கிராம் மதகடி பகுதியிலருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு 5-12-22 (நேற்று)முதல் 10ம்தேதி நள்ளிரவுவரை 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாச்சியர் உத்தரவிட்டார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், 2 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதலோ, பேசுதலோ கூடாது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர்

click me!