மயிலாடுதுறையில் மாமியார், மாமனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆசி பெற்ற நிக்கில் கல்ராணி

Published : Jul 25, 2024, 12:27 AM IST
மயிலாடுதுறையில் மாமியார், மாமனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆசி பெற்ற நிக்கில் கல்ராணி

சுருக்கம்

மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஜ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆயுள் விருத்தி பெற வேண்டி பல்வேறு சிறப்பு பூஜையகள், ஹோமங்கள் செய்வது வழக்கம்.

ஸ்லீவ் லெஸ்சில் ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை திவ்யா துரைசாமி

அந்த வகையில் கோவிலில் பிரபல தெலுங்கு திரைப்பட இஙக்குநர் ரவிராஜா பினிசெட்டி, அவரது மனைவி ராதாராணி 76 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு விஜய ரத சாந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில் இவரது மகன் ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் குடும்பத்தோடு பங்கேற்றனர்.

“பழிவாங்குவதில் கவனம் செலுத்தாதீர்கள் பிரதமரே” தனிமைப்பட்டு விடுவீர்கள் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

தொடர்ச்சியாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்துஞ்சிய ஹோமம், ஆயுள் ஹோமங்களை அர்ச்சகர்கள் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டு புனித நீர் அடங்கிய கலசங்களைக் கையில் ஏந்தியபடி கோவிலை சுற்றி வந்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளி பிரகாரத்தில் தம்பதிகளுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள சாமி சன்னிதிகளுக்கு சென்று சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு