தலைவர்கள் இடையே முற்றும் வார்த்தை போர்; ஆட்டு குட்டியின் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்

By Velmurugan s  |  First Published Jul 11, 2024, 10:18 AM IST

நாகை மாவட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென ஆட்டுக்குட்டியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை மோதல் முற்றி வருகிறது. வார்த்தை மோதல் முற்றிய நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். குறிப்பாக நெல்லையில் காங்கிரஸ் கட்சி அலுவலக வாயிலில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது.. குற்றாலத்தில் தட்டி தூக்கிய போலீஸ்- காரணம் என்ன தெரியுமா.?

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில், நாகை மாவட்டம், நாகூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ஆட்டின் தலை பதிந்த புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அண்ணாமலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

சென்னை கமிஷனரை மாத்திட்டா க்ரைம் குறைஞ்சிடுமா? CM குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை! TTV.தினகரன்!

இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் திடீரென ஆட்டுக்குட்டி உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் ஆட்டுக்குட்டியின் உருவ பொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பிடுங்கினர். அப்போது காவல் துறையினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என கோரி, காங்கிரஸ் கட்சியினர் நாகூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை, போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

click me!