Crime: ஒரே நேரத்தில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை; கைது செய்யப்பட்ட காமுகனுக்கு கால் முறிவு

Published : Jul 21, 2024, 04:06 PM IST
Crime: ஒரே நேரத்தில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை; கைது செய்யப்பட்ட காமுகனுக்கு கால் முறிவு

சுருக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் தாய்க்கும், மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கை நல்லூரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 16 வயது மதிக்கத்தக்க மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் இரவு தாய் மாவு அரைக்க வெளியில் சென்றுவிட்டார். நள்ளிரவு சுமார் 11 மணியளவில் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே  சத்தம்போட்டுள்ளார். அந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட அந்த சிறுமி கொள்ளைபுரம் வழியாக வெளியில் ஓடிச்சென்று தனது உறவினர் வீட்டில்  தஞ்சமடைந்துள்ளார்.

மதுரை அழகர் கோவில் தேர் திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்து வழிபாடு 

சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்த்த உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றிகூறி தன் தாயை காணவில்லை என்றும் கூறியுள்ளார். உடனே உறவினர்கள் தேடி பார்த்தபோது வீட்டின் கொள்ளைபுரத்தில், கண், காது, மார்பு, நெற்றி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன்  அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தாய், மகள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வேளாங்கண்ணி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னைக்குள் நுழைய தடை; ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள்

தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் 3 தனிப்படை அமைத்து  அந்த மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கருவேலங்கடை அருகே  சுற்றித்திரிந்த காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த  முத்துக்குமார் தனிப்போடை போலீசார் பிடிக்கும் போது தப்பி ஓடி வழுக்கி விழுந்ததில் கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு