ஜல்லிக்கட்டு போல் நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாறினால் வெற்றி கிடைக்கும் - அமைச்சர் உதயநிதி பேச்சு

Published : Sep 21, 2023, 12:57 PM IST
ஜல்லிக்கட்டு போல் நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாறினால் வெற்றி கிடைக்கும் - அமைச்சர் உதயநிதி பேச்சு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போல நீட் எதிர்ப்பும் மக்கள் போராட்டமாக மாறினால் வெற்றி கிடைக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரை வண்டியூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து 100 அடி கொடி மரத்தில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்த தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, திமுக மாவட்ட செயலாளர்கள் மணிமாறன்,  எம்.எல்.ஏ தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா மேடையல் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி மாநாடு நடத்துவது தொடர்பாக  காஞ்சிபுரம் முதல் இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தை துவங்கி மாவட்டம் தோறும் நடத்தி வருகிறோம்.

திடீரென டயர் வெடித்து புளியமரத்தில் மோதிய தனியார் பேருந்து; 30க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை தான் திமுக இளைஞர் அணியின் தாய் வீடு. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் 1980ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே துவங்கப்பட்ட முதல் இளைஞர் அணி திமுகவுடையது தான். நமது இளைஞர் அணி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. நான் 2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அமைச்சர் மூர்த்தி என்னை மதுரை அழைத்து மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்.  அன்று துவாங்கி தமிழ்நாடு முழுவதும் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றுக் வருகிறேன். 

ஆர்.பி உதயக்குமார்  நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்கிறார்?. நான் இப்போது சொல்கிறேன், திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைக்கிறேன், அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக செயல்பட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு திராணி இருந்தால் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இட முடியுமா?

4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு; உறவினர்கள் கதறல்

ஜல்லிக்கட்டு மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி பெற்றது போல நீட் தேர்வை மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி பெறலாம். ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்  அதற்கு ஓர் உதாரணம் தருகிறேன்,  இந்தியாவின் முதல் குடிமகள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவுக்கு பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் நடிகை எல்லாம் பங்கேற்கிறார்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், விதவைப் பெண் என்பதால் குடியரசுத்தலைவருக்கு அழைப்பு இல்லை. இதுதான் சனாதனம். இதனால் தான் இதை ஒழிக்க வேண்டும் என கூறி வருகிறேன் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!