மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு வீட்டிற்கும், நாட்டிற்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும் - உதயநிதி நம்பிக்கை

By Velmurugan s  |  First Published Sep 20, 2023, 5:37 PM IST

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவும் என்று தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை 500 மகளிருக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உட்பட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமை உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர்களுக்கு வழங்கும் டெபிட் கார்டு மகளிருக்கு வழங்கும் துருப்பு சீட்டு. மேல் ஜாதி, கீழ் ஜாதி, முதலாளி, தொழிலாளி என பாகுபாடுகளை விட ஆண், பெண் என்ற பாகுபாடு மோசமானது என தந்தை பெரியார் கூறியுள்ளார்.

கர்நாடகா அரசை கலைத்துவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் - அய்யாகண்ணு ஆவேசம்

இதனால் தான் மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் பணத்திற்காக கணவரையோ, மகனையோ எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக தான் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இது உதவித்தொகை அல்ல உங்களின் உரிமை தொகை. மகளிர்கள் முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு குழந்தைகளும் முற்போக்காக சிந்திக்க முடியும். மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவும் என்பதை நம்புகிறேன் என்றார்.

click me!