மதுரை ரயில் தீ விபத்தில் 10 பேர் பலியானது எப்படி? இதுதான் காரணமா? வெளியான பகீர் தகவல்.!

By vinoth kumar  |  First Published Aug 26, 2023, 2:48 PM IST

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலா ரயிலில்  60-க்கும் மேற்பட்டோர் ஆன்மிகப் சுற்றுலா பயணம் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளனர். 


ரயில் பெட்டிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருட்களுக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் லக்னோ  ரயிலில் கேஸ் சிலிண்டர், விறகு கட்டைகள், எண்ணெய் டின் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலா ரயிலில்  60-க்கும் மேற்பட்டோர் ஆன்மிகப் சுற்றுலா பயணம் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளனர். கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர்.  அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

இந்நிலையில் இன்று அதிகாலை ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ சிறிது நேரத்தில்  மளமளவென அனைத்து இடங்களில் பரவியது. இதனை கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது! இரட்டை சதம் அடித்த இஞ்சி! கண்களில் கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை.!

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், ரயில் தீ விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க ரயிலில் சிலிண்டர் கொண்டு சென்றதே காரணம் என கூறப்படுகிறது. மேலும் ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்கள், விறகு கட்டைகள், எண்ணெய் டின் உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. 

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் கூறுகையில்;- ரயிலில் பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றதே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ரயில் பெட்டிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!