விக்டோரியா கவுரி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைகோ பேட்டி

By Velmurugan s  |  First Published Feb 7, 2023, 4:39 PM IST

விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.


பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் "ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மகத்தான வெற்றி பெரும். தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி ஆழமாக காலுன்றி இருக்கிறது. விக்டோரியா கவுரி நீதிபதியாக அறிவிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது. விக்டோரியா கவுரியை திரும்ப பெற வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோர் குடியரசு தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் வலியுறுத்தி உள்ளோம். விக்டோரியா கவுரி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டது. விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்க தகுதியற்றவர். அவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

கோவையில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் ஆனந்த குளியலிட்ட கோவில் யானை

கலைஞரின் சங்கத் தமிழ், காவியத்தின் அடையாளம் பேனா. பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பேனா நினைவுச் சின்னத்தால் சுற்றுசூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது" என கூறினார்.

இரட்டை இலை சின்னத்திற்காகவே வேட்பாளர் வாபஸ்; ஓ.பி.எஸ். ஆதரவாளர் விளக்கம்

click me!