அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை செய்துள்ளதால், அங்கிருக்கும் 2 வயது பேரனை அழைத்து வர வேண்டும் மதுரை தம்பதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியை அடுத்த பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. மகன் பிரவீன்குமார் அமெரிக்காவில் ஐ. டி கம்பெனியில் பணியாற்றி வந்தார். தமிழ்ச்செல்வி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு விஸ்ருத் மிலன் என்ற 2 வயது மகன் இருக்கின்றான்.
undefined
இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?
கடந்த மே 2 ஆம் தேதி அமெரிக்காவில் பிரவீன்குமார், தமிழ்ச்செல்வி தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இருவரது உடல்களையும் ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர். பேரன் அமெரிக்காவில் பிறந்ததால், குழந்தை அந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளது. இதனால் குழந்தையை இந்தியா அழைத்து வரமுடியவில்லை.
இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்
உரிய அனுமதி பெற்று குழந்தையை அழைத்து செல்லுங்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவதாக கூறப்படுகிறது. மகனும், மருமகளும் இறந்த நிலையில், பேரனையாவது அழைத்து வரவேண்டும் என தவிப்பில் உள்ளனர். எனவே, தங்களது பேரனை அமெரிக்காவிலிருந்து அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியும், அவரது மனைவியும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை