மதுரையில் மூன்று நாட்களாக வெளுத்து வாங்கும் மழை.. மகிழ்ச்சியில் தூங்கா நகர மக்கள்..!

Published : Oct 15, 2022, 01:59 PM ISTUpdated : Oct 15, 2022, 02:01 PM IST
மதுரையில் மூன்று நாட்களாக வெளுத்து வாங்கும் மழை.. மகிழ்ச்சியில் தூங்கா நகர மக்கள்..!

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மலையின் தொடர்ச்சியாக நேற்று இரவு மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மதுரை நகரிலும் இரவு 7 மணிக்கு மேல் இடியுடன் கூடிய  மழை பெய்தது. 

மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு மழை பெய்து வருவதால் தூங்கா நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மலையின் தொடர்ச்சியாக நேற்று இரவு மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மதுரை நகரிலும் இரவு 7 மணிக்கு மேல் இடியுடன் கூடிய  மழை பெய்தது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை.. இன்று 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..

கனமழை காரணமாக மதுரையில் அனைத்து சாலைகளிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் வீதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்திற்கு ஆனாகினர். நேற்று மாலையும் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மதுரையில் அனைத்து இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையோர வியாபாரிகள் மாலை நேர மழையால் பாதிப்புக்கு உள்ளாகினர்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!