வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ.. நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்..!

Published : Oct 18, 2022, 12:59 PM ISTUpdated : Oct 18, 2022, 01:00 PM IST
வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ.. நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்..!

சுருக்கம்

 திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் போட்டதால்,  ஆட்டோ ஓட்டுநர், கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. 

மதுரையில் வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (30). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுறம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் போட்டதால்,  ஆட்டோ ஓட்டுநர், கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. எதிரே வந்த கல்லூரி பேருந்து ஓட்டுனர் சாதூர்யமாக இடது பக்கம் திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய விபத்து.. அந்தரத்தில் பறந்து தலைப்புற கவிழ்ந்த கார்.. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி.!

மேலும் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணம் செய்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த புஷ்பா மற்றும் குழந்தைகள் தீபிகா, கவின் மற்றும் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பகுதியில் அதிக அளவு நாய் தொல்லை இருப்பதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் மதுரை மாநகராட்சியினர் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க;-  ஷாக்கிங் நியூஸ்.. தண்ணீர் வாளியில் மூழ்கி 18 மாத குழந்தை துடிதுடித்து பலி.. கதறி துடித்த பெற்றோர்..!

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்