மதுரையில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டி தங்கக்காசு பணம் பறித்த இளைஞர் கைது!!

Published : Oct 17, 2022, 03:44 PM IST
மதுரையில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டி தங்கக்காசு பணம் பறித்த இளைஞர் கைது!!

சுருக்கம்

மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து , வீடியோ எடுத்து மிரட்டி தங்கக்காசு மற்றும் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் .  

மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி, டிவிஎஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை ஐயர் பங்களா உச்சபரம்பு மேடு கோதாவரி தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சந்துரு (வயது 20) காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதையடுத்து, அந்த மாணவியை நரிமேடு சிங்கராயர் காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்று அதன் பின்புறமாக வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளார். வீடியோவைக் காட்டி அந்த சிறுமியை மிரட்டி 15 பவுன் தங்கக்காசுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. 

ஷாக்கிங் நியூஸ்.. தண்ணீர் வாளியில் மூழ்கி 18 மாத குழந்தை துடிதுடித்து பலி.. கதறி துடித்த பெற்றோர்..!
 

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகை பறித்த வாலிபர் சந்துருவை [போலீசார் கைது செய்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!