கோயில் விருந்தில் துபாக்கிச்சூடு… மதுரையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

Published : Nov 13, 2022, 06:50 PM IST
கோயில் விருந்தில் துபாக்கிச்சூடு… மதுரையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

சுருக்கம்

மதுரை அருகே கோயில் கெடா விருந்தில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை அருகே கோயில் கெடா விருந்தில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள கோவில் ஒன்றில் கெடா விருந்து நடந்துள்ளது. அப்போது, கோயிலுக்கு வந்த இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது.

இதையும் படிங்க: சீர்காழியில் இரவுக்குள் மின் விநியோகம் சரி செய்யப்படும்… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!!

இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்விரோதம் காரணமாக கணேசன் என்பவருக்கும் தனசேகரன் என்பவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதும் அதில் தனசேகரன் துப்பாக்கி சூடு நடத்தியதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: மழை பாதிப்பை கணக்கிட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்புங்கள்.! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

இதை அடுத்து தனசேகரனை கைது செய்த அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!