தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

By Narendran S  |  First Published Nov 10, 2022, 4:51 PM IST

மதுரையில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரையில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 10 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரளா.! கை கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- இறங்கி அடிக்கும் சீமான்

Tap to resize

Latest Videos

undefined

காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, உயிரிழந்தவர்கள் அம்மாவாசி, வல்லரசு, கோபி, விக்கி மற்றும் பிரேமா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் வலையப்பன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையும் படிங்க: கோவை கார் குண்டு வெடிப்பு; ஜமேசா முபினுக்கு வெடிபொருள் வைக்க டிரம் கொடுத்தவர் இவர்தான்!!

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயிரிழந்த 5 பேருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

click me!