பாதாள சாக்கடை தோண்டும் போது பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

Published : Nov 07, 2022, 05:28 PM IST
பாதாள சாக்கடை தோண்டும் போது பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

மதுரை கூடல் நகர் பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது ஒருவர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

மதுரை கூடல்நகர் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்குழாய் அமைக்கும் பணியின் போது 36 வயதான சக்திவேல் எனும் தொழிலாளி மண்சரிவில் சிக்கி இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எம்.பி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே தொடர் மரணங்களுக்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த விசயத்தில் விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படாத நிலை தொடர்வதை ஏற்கமுடியாது.

இதையும் படிங்க.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்

மாநகராட்சி நிர்வாகம் நடந்துள்ள தவறுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றார். எம்.பி வெங்கடேசன் பார்வையிட்ட போது காவல் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் கூடுதல் போலீசார் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!

இதையும் படிங்க.முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு.. சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்