பிரதமரை வழியனுப்பி வைத்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்… எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாததால் ஏமாற்றம்!!

Published : Nov 11, 2022, 11:30 PM IST
பிரதமரை வழியனுப்பி வைத்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்… எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாததால் ஏமாற்றம்!!

சுருக்கம்

தமிழகம் வந்த பிரதமர் மோடி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில் பிரதமர் மோடியை இருவரும் மதுரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். 

தமிழகம் வந்த பிரதமர் மோடி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில் பிரதமர் மோடியை இருவரும் மதுரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். முன்னதாக திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார்.

இதையும் படிங்க: ‘வணக்கம் தமிழ்நாடு! மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்’ - நெகிழ்ந்த பிரதமர் மோடி !

பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்லாமல் காரில் பிரதமர் மோடி மதுரைக்கு புறப்பட்டார். மதுரையில் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பிடமும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சங்க கால தமிழர்கள்.. தமிழ்நாட்டின் கலாச்சாரம்.! அசத்தலாக தமிழில் பேசிய பிரதமர் மோடி !

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர். இதை அடுத்து மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் விசாகபட்டினத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சாலை நெடுங்கிலும் மக்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!