மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின், மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ள முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்க தானியங்கி இயந்திரங்களை கூடுதலாக 18 ரயில் நிலையங்களில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; தீபக் ராஜாவின் உடலை சூழ்ந்த ஆதரவாளர்கள் - குவிக்கப்பட்ட போலீஸ் படை
அதன்படி திண்டுக்கல், பழனி, காரைக்குடி, இராமேஸ்வரம், ராமநாதபுரம், கல்லிடைக்குறிச்சி, மானாமதுரை, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, போடிநாயக்கனூர், புனலூர் ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் வழங்க இயந்திரம் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கமிஷன் அடிப்படையில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் விற்பனை இயந்திரத்தை இயக்குவதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.