சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு; விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு

By Velmurugan s  |  First Published May 27, 2024, 11:43 AM IST

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் துறையினரால் பதியப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு


பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்த காரணத்திற்காக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் தேனி மாவட்டத்தில் கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்படும் போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி மாவட்ட பழனி செட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனின் காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மாமனார் - இராமநாதபரத்தில் பரபரப்பு சம்பவம்

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் தனக்கு விசாரணை வழங்க வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

மதுரையில் புகாரளிக்க வந்தவர்களிடம் நகைகளை வாங்கி ரூ.45 லட்சத்திற்கு அடமானம் வைத்த பெண் ஆய்வாளர்; டிஐஜி அதிரடி

இதனிடையே வழக்கு தொடர்பான சில ஆவணங்களை தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

click me!