ரீமல் புயல்: மதுரை டூ துபாய் விமானம் ரத்து - ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம்!

By Manikanda Prabu  |  First Published May 26, 2024, 12:34 PM IST

ரீமல் புயல் எதிரொலியாக மதுரையில் இருந்து  துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது


ரீமல் புயல் காரணமாக மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 70க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு  ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் தினமும் விமான சேவை வழங்கி வருகிறது. இதனிடையே, ரீமல் புயல் வலுப்பெற்று வங்கக் கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டி உள்ள கிழக்கு மத்திய கடற்கரையில் கடப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

இதன் காரணமாக, மதுரையில் இருந்து 12.00 மணிக்கு 70 பயணிகளுடன் துபாய் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த விமான சேவை வழங்கும் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென விமானத்தை ரத்து செய்ததால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாளை அல்லது நாளை மறுநாள் பயண திட்டத்தை மாற்றம் செய்து தருவதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!