மதுரையில் 9 வயது சிறுவனை கொன்றுவிட்டு நாடகமாடிய 13 வயது சிறுவன் - போலீஸ் அதிரடி

By Velmurugan s  |  First Published May 25, 2024, 1:25 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உருது கற்று கொடுக்கும் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி கிராமத்தில் உருது கற்றுத் தரும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 13 வயது மாணவன், ஷாநவாஸ் என்ற 9 வயது மாணவனை பள்ளிவாசலில் உள்ள காய்கறி அறுக்கும் கத்தியால் குத்தி அங்குள்ள கழிவு நீர் தொட்டியில் தள்ளியுள்ளார். 

பஞ்சாயத்து ஓவர்; ஓசி டிக்கெட் பிரச்சினைக்கு முடிவு கட்டிய போக்குவரத்து, காவல்துறை செயலாளர்கள்

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து, ஒன்றும் தெரியாதது போல் 13 வயது மாணவன் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே மாணவன் ஷாநாவாஸ் காணவில்லை என தேடிய போது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அச்சச்சோ என்ன இவ்ளோ ஆச்சாரமா பேசறேல்? காஞ்சியில் வீதிக்கு வந்த வடகலை, தென்கலை பிரச்சினை

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவன் கொலை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13 வயது மாணவனை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அருகே உருது படிக்க வந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!