நாய் ரூபத்தில் வந்த எமன்.. ஆயுதப்படைக் காவலர் படுகாயமடைந்து உயிரிழப்பு.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published May 23, 2024, 2:17 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஓ.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் காளிமுத்து (35). இவர் மதுரை மாநகர ஆயுதப்படையில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.


திருமங்கலம் அருகே குறுக்கே நாய் வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த ஆயுதப்படைக் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஓ.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் காளிமுத்து (35). இவர் மதுரை மாநகர ஆயுதப்படையில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். மேலும் அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகவும் பணியாற்றினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Remal Cyclone: வங்கக்கடலில் உருவாகிறது புயல்.. இதற்கு பெயர் என்ன தெரியுமா? தமிழகத்துக்கு பாதிப்பு இருக்கா?

இந்நிலையில், பணிமுடிந்து செவ்வாய்க்கிழமை இரவு திருமங்கலம் நோக்கி விமான நிலைய சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது இருசக்கர வாகனம் மோதியது. 

இதில் தவறி கீழே விழுந்த காளிமுத்து படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 10 தனிப்படைகள் அமைத்தும் எந்த துப்பும் கிடைக்காத ஜெயக்குமார் மரண வழக்கு! வேறுவழியில்லாமல் டிஜிபி அதிரடி முடிவு

click me!