கஞ்சா வைத்திருந்த விவகாரம்; சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு

By Velmurugan s  |  First Published May 22, 2024, 4:21 PM IST

கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் விசாரணையின் போது காவல் துறையினர் தன்னை துன்புறுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.


பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும் போது அவரது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.

இஸ்லாமியர்களின் பிறை கொடியை ஏற்றி கோவில் திருவிழாவை தொடங்கிய பொதுமக்கள்; மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் நீதிபதி செங்கமலசெல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல்துறை விசாரணையில் துன்புறுத்தல் இருந்ததா என நீதிமன்ற தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர் தனக்கு விசாரணையின் போது காவல்துறையினர் எந்த துன்புறுத்தலும் அளிக்கவில்லை என பதிலளித்தார்.

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 6ம் ஆண்டு தினம்

இந்நிலையில்  சவுக்கு சங்கருக்கு ஜூன் -5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று சவுக்குசங்கர் தனக்கு ஜாமின் அளிக்க கோரி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

click me!