Latest Videos

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? வெளியான அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 22, 2024, 2:27 PM IST
Highlights

மதுரை கிழக்கு வட்டம் ஒத்தக்கடை காவல் சரகத்திற்குட்பட்ட நரசிங்கம் மற்றும் புதுத்தாமரைப்பட்டி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் எண்: 5439 மற்றும் 5461 இயங்கி வருகிறது. 

மதுரை திருமோகூர் கிராமத்தில் நடைபெறும் அருள்மிகு காளமேகப்பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு வட்டம் ஒத்தக்கடை காவல் சரகத்திற்குட்பட்ட நரசிங்கம் மற்றும் புதுத்தாமரைப்பட்டி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் எண்: 5439 மற்றும் 5461 இயங்கி வருகிறது. இந்நிலையில்,  திருமோகூர் கிராமத்தில் நடைபெறும் அருள்மிகு காளமேகப்பெருமான் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை காலை 10.00 மணி முதல் இரவு 12.00 மணிவரை மேற்படி தினத்தன்று மூடப்பட மாவட்ட ஆட்சித்தலைவர்  சங்கீதா உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி கார்! சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள் துடிதுடித்து பலி!

மேற்படி நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் இந்த அரசு மதுபானக்கடைகளில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

click me!