மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள் மச்சக்காளை மற்றும் பிரபு. இருவரும் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள் மச்சக்காளை மற்றும் பிரபு. இருவரும் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: காசுக்காக இப்படிலாமா செய்வாங்க! தனது உல்லாச வீடியோவை வைத்து பெண் செய்த காரியம்! முக்கிய கட்சி பிரமுகர் கைது!
அப்போது நோட்டம்பட்டி பகுதியில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் சினிமா பாணியில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மச்சக்காளை, பிரபு ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Pournami Girivalam: திருவண்ணாமலை பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!