மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா; மலை போல் குவிக்கப்பட்ட முக்கனிகள்

By Velmurugan s  |  First Published May 24, 2024, 6:09 PM IST

மதுரை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசாமி கோவில் திருவிழாவில் வழக்கம் போல் ஆண்கள் மட்டும் பங்கேற்று முக்கனிகளையும் படையலிட்டு வழிபட்டு சென்றனர்.


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் உச்சி கருப்பணசாமி திருக்கோயில் உள்ளது.  150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மக்கள் வழிபடுவதாக சொல்லப்படுகிறது. ஒரு சிறிய பாறை மீது சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர். மேலும் ஆண்கள் மட்டும் வழிபடுவது இத்திருக்கோவிலின் வழக்கம்.

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கருப்பண்ணசாமி; 7 வருடங்களுக்கு பின் நடைபெற்ற வினோத திருவிழா

Tap to resize

Latest Videos

இந்தக் கோவிலில் உச்சி கருப்பணசாமிக்கு மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனி விழா நடைபெற்றது. கோவிலில் சாமிக்கு முக்கனிகள் படைக்கப்பட்ட பின்னர் கோவிலுக்கு வரும் ஆண்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டு அங்கேயே சாப்பிட்டு செல்ல வேண்டும் என கூறுகின்றனர்.

கோவையில் பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி; நிவாகிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி

மேலும் திருநீரு முதல் பிரசாதம் வரை எதுவாக இருந்தாலும் இத்திருக்கோவிலில் இருந்து வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஒரு வினோதமான பழக்கவழக்கம் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டும் பங்கேற்று உச்சி கருப்பணசாமிக்கு மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கணிகளை வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த முக்கனிகளும் கோயிலுக்கு வந்திருந்த ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது சாப்பிட்டு சென்ற வினோத விழா நடைபெற்றது.

click me!