மதுரையில் புகாரளிக்க வந்தவர்களிடம் நகைகளை வாங்கி ரூ.45 லட்சத்திற்கு அடமானம் வைத்த பெண் ஆய்வாளர்; டிஐஜி அதிரடி

By Velmurugan sFirst Published May 25, 2024, 5:22 PM IST
Highlights

மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர்  போலீசில் குடும்ப பிரச்சனை காரணமாக வந்தவர்களிடம் நகையை வாங்கி அடகு வைத்த பெண் ஆய்வாளரை பணியிட நீக்கம்  செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஆய்வாளர் கீதா. திருமங்கலம் பகுதியைச் சார்ந்த மென் பொறியாளர் ராஜேஷ் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அபிநயாவிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இதை ஆய்வாளர் கீதா விசாரித்து வந்தார். 

இந்நிலையில் திருமணத்தின்போது தனது பெற்றோர் வீட்டில் போட்ட நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா ஆய்வாளர் கீதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து 95 சவரன் நகைகளை ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்துள்ளார். அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் வேண்டுமென்றே ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

Latest Videos

இனி நமக்குள்ள சண்டை வேண்டாம்; சமாதானமா பொயிடலாம் - சர்ச்சை காவலருடன் சியர்ஸ் செய்த நடத்துநர்

இதுகுறித்து ராஜேஷ் திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில் அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர்  கீதா அவகாசம் கேட்டிருந்தார். 

45 பயணிகளுடன் வந்த சுற்றுலாப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு; உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்த சோகம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 70 சவரனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இந்த குறித்து விசாரித்த டி.ஐ.ஜி., ரம்யா பாரதி, ஆய்வாளர் கீதாவை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

click me!