தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டு அமைச்சரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அமைச்சரை காரில் அழைத்துச் செல்லும் போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கூறுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நேரத்தில் அவர் குணமாகி வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
undefined
சிறுமியை கற்பழித்த சிறை வார்டன் போக்சோ சட்டத்தில் கைது
யார் வந்தாலும் அவர்களது வசதிக்கு ஏற்றபடி அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்று பல வேலைகளை மத்திய அரசு செய்யும். சிபிஐ அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகிறது. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை. இது கொடுங்கோல் ஆட்சி முறை. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஊழல் என குற்றம் சாட்டுவது, காலம் தாழ்ந்த நடவடிக்கை. மத்திய அரசு மிரட்டி அச்சுறுத்தும் தொணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று” என்று கூறினார்.