கன்னியாகுமரிக்கு இடம்பெயர்ந்த அரிகொம்பன்; அச்சத்தில் மக்கள் - அதிகாரிகள் விளக்கம்

By Velmurugan sFirst Published Jun 12, 2023, 9:04 AM IST
Highlights

அப்பர் கோதையாரில் இருந்து அரி கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் குற்றியாறு மலைகாட்டு பகுதியில் வந்து விட்டது என குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதிகாரபபூர்வமாக அறிவித்துள்ளனர். 

மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய அரிக்கொம்பன் யானை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழக கேரளா எல்கையான பெரியார் புலிகள் காப்பதற்கு கொண்டு வந்து விடப்பட்டது. அது அங்கிருந்து கம்பன் நகருக்குள் புகுந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்பு மயக்க ஊசி செலுத்தி மிகவும் பாதுகாப்பாக லாரி மூலம் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மலைக்காட்டு பகுதிகளில் கொண்டு விடுவதற்காக வந்தனர். 

யானையை விடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மேல கோதையாறு அணைப்பகுதியில் கொண்டு விட்டனர். தொடர்ந்து ஏராளமான வனக் குழுவினர் அமைக்கப்பட்டு யானையை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர். மேலும் ஜிபிஎஸ் கருவி யானை மீது பொருத்தப்பட்டுள்ளதால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை யானை இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 

கோவையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்

இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக யானையினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக  கூறப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருந்த அப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். யானையை கொண்டு இறக்கி விடப்பட்ட பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் யானை சுற்றி வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. 

ஒரு எம்.பி. சீட்டை கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்க மாட்டார்கள்! அமித் ஷாவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த TR.பாலு

இந்நிலையில் இன்று அதிகாலை அப்பர் கோதையாரில் இருந்து அரி கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் குற்றியாறு மலைகாட்டு பகுதியில் வந்துவிட்டதாக குமரி மாவட்ட வனத்துறை அதிகாரபபூர்வமாக தெரிவித்துள்ளனர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முத்துகுழி வயல் மற்றும் குற்றியாறு பகுதிகளில் தீவீர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அச்ச படவேண்டாம் என மாவட்ட  ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

click me!