வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரழிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுபுரை தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன்(வயது 51). பெயிண்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சுதர்சன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலைதடுமாறிய சுதர்சன் பேருந்து நிறுத்தத்தில் கீழே விழுந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வடசேரி வந்த அரசு பேருந்து சுதர்சன் மீது மோதியது. பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்த முற்பட்டார். இருப்பினும் பேருந்தின் முன் சக்கரம் சுதர்சன் மீது ஏறியது.
68 வயது மூதாட்டியை கற்பழித்துவிட்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
இதில் பலத்த காயமடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த வடசேரி காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வடசேரி காவல் ஆய்வாளர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காவிரியில் மூழ்கி தம்பதி பலி; கரையில் நின்றிருந்த குழந்தைகள் ஏமாற்றம்