கன்னியாகுமரியில் தவறி விழுந்த பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து; மகன் கண் முன்னே பலியான தாய்

By Velmurugan s  |  First Published Jun 1, 2023, 11:15 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் மீது   அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் போஸ்கோ. இவரது மனைவி மரிய கொரோட்டி பிரீடா (வயது 40). இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில்  குலசேகரம் நாகக்கோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். மழை பெய்து ஓய்ந்திருந்த காரணத்தால் சாலை ஈரப்பதத்துடன் வழுவழுப்பான நிலையில் காணப்பட்டது. 

Latest Videos

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனம் சாலையில் விழுந்துள்ளது. அப்போது எதிர் திசையில் வந்த அரசு நகரப்பேருந்து கீழே விழுந்த மரிய கொரோட்டி பிரீடா மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல் 

மகன் கண் முன்னே தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உயிரிழந்த மரிய கொரோட்டி பிரீடாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் அதிகாரி என கூறிக்கொண்டு கடைகளில் வசூல் வேட்டை நடத்திய போலி ஆசாமி கைது

click me!