கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செம்மங்காலை பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த முயல் கூட்டினுள் முயல் ஒன்றை விழுங்கியபடி நகர முடியாமல் படுத்து கிடந்த நாகப்பாம்பை தீ அணைப்பு துறையினர் பாதுகாப்பாக பிடித்து சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபின். இவரது வீட்டில் முயல் ஒன்றை கூட்டில் வைத்து வளர்த்து வருகிறார். இந்த முயலுக்கு தினமும் காலை வேளையில் பிரபின் உணவு வைப்பது வழக்கம். அதன்படி இன்று காலையிலும் கூட்டில் இருக்கும் முயலுக்கு உணவு வைக்கவேண்டி சென்ற போது கூட்டினுள் இருந்த முயலை காணாமல் போய் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபின் கூட்டினுள் தேடி பார்த்தபோது ஒரு நாகப்பாம்பு ஒன்று முயலை விழுங்கிவிட்டு எங்கும் செல்லமுடியாமல் கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரபின் சத்தம்போடவே உறவினர்களும் ஓடி வந்து பார்த்துள்ளனர். ஆட்கள் வரும் சத்தம் கேட்ட பாம்பு அங்கிருந்து மெல்ல நகர்ந்து வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த உரலினுள் சென்று பதுங்கியது.
2 வயது குழந்தைக்கு எமனாக மாறிய தந்தை; கவனக்குறைவால் நேர்ந்த சோகம்
இதனையடுத்து பிரபின் குழித்துறை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் உரலுக்கு அடியில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குபையினுள் இட்டு எடுத்து சென்றனர். பாம்பை தீ அணைப்பு துறையினர் பிடித்து சென்ற பிறகே வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அரிகொம்பன் யானை தாக்கி உயிரிழந்த காவலாளி குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு