உத்திரமேரூரில் மூன்று மணி நேரமாக பேருந்துகள் வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், 6 மண்டலத்தில், 55 பணிமனைகள் உள்ளன. உத்திரமேரூர் பணிமனையில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில், 27 'ரூட்' பேருந்துகள் மற்றும் ஆறு 'ஸ்பேர்' பேருந்துகள் என, மொத்தம் 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உத்திரமேரூர் பேருந்து பணிமனையில் உள்ள பேருந்துகள் உத்திரமேரூரில் இருந்து அதிகாலை 4.45 மணி அளவில் தாம்பரத்திற்கு முதல் பேருந்து வரும். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஒவ்வொரு 15 நிமிடத்திற்க்கும் பேருந்துகள் இயக்கபட வேண்டும்.
இந்நிலையில் உத்திரமேரூரில் இருந்து புக்கத்துறை, செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மார்க்கமாக சென்னை செல்லும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள், சிகிச்சைக்காக செல்கின்ற நோயாளிகள் என பலரும் பேருந்து நிலையத்தில் காலை 4.30 மணியில் இருந்து 7.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வராததால் ஆவேசமடைந்தனர்.
undefined
“படித்த படிப்புக்கு வேலை இல்லை” சட்டசபையில் சான்றிதழ்களை வீசி எறிந்த பட்டதாரி இளைஞர்
கோபத்தில் இருந்த பயணிகள் காலை 7.20 மணியளவில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு வந்த முதல் அரசு பேருந்தை மறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. முக்கியமான பகுதியில் சாலை மறியல் நடைபெற்றதால் அந்த வழியாக செல்கின்ற லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவை ஏதும் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்தனர்.
மலை ரயிலை வழிமறித்து சுற்றுலா பயணிகளுக்கு பாய் சொன்ன காட்டு யானை