டீ கப் ஆக்சிஜன் மாஸ்க்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் விளக்கம்

By Velmurugan s  |  First Published Aug 2, 2023, 4:03 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்கிற்கு பதிலாக டீ கப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ளிளக்கம் அளித்துள்ளார்.


சிறுதானிய ஆண்டையொட்டி போரூர் ராமாச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஊட்டச்சத்து துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை இணைந்து 500 வகையான திணை உணவு வகைகள் அடங்கிய கண்காட்சியை நடத்தின. அதன் ஒருபகுதியாக திணை வகை உணவு குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "காஞ்சிபுரம் உத்திரமேரூரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் பேப்பர் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில் மருத்துவ சேவை இயக்குநர் தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மதுபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ போக்சோ சட்டத்தில் கைது

அச்சிறுவனுக்கு பேப்பர் கப்பை செவிலியர்கள் போடக்கூடாது என வலியுறுத்தியும் அந்த சிறுவனின் தந்தையே போட்டுவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது ஒரு சிறிய விஷயம் தான். ஆனால் அதை வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடகங்களில் சின்ன விஷயத்தை பூதாகரப்படுத்தி பெரிதாக்குகின்றன. அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மார்க் இல்லாதது போன்று தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் அப்படி இல்லை. செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டும் தவறை சரிப்படுத்த முக்கியத்துவம் தருகிறோம். சின்ன செய்தியை பூதாகரமாக்கி பிரளயமாக்குகின்றன ஊடகங்கள்.

மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்

ஒரு செய்தியை பொதுவெளியில் கொண்டு  போகிற போது அதன் உண்மை தன்மையை தேர்ந்தெடுத்து செய்து நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இருந்தாலும் உத்திரமேரூர் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக டிஎம்எஸ் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுதானிய உணவகங்களில் கலப்படங்களோ, தவறு நடக்கின்றனவா என்பதை மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அப்படி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

click me!