பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி

By Velmurugan s  |  First Published Jul 11, 2023, 11:47 AM IST

செங்கல்பட்டு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்பதாக மது பிரியர்கள் முறையிட்ட நிலையில், அங்கு வந்த காவல் அதிகாரி அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் நேற்று பிற்பகல் கல்பாக்கம் அடுத்த அனுபுரத்தில் பணியாற்றும் இளைஞர்கள் மூன்று பேர் மது பாட்டில் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வைக்கும் போது அங்கு வந்த செங்கல்பட்டு நகர காவலர்கள் இருவர் இளைஞர்களிடம் இருந்து மதுபாட்டிகளுடன் இருச்சக்கர வாகனத்தை பிடிங்கியுள்ளனர்.

Latest Videos

undefined

இதனால் அந்த இளைஞர் தாங்கள் ஊரில் திருவிழா என்பதற்காக மது வாங்கியதாகவும், தாங்களும் அரசு ஊழியர்கள் தான் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் எங்களிடமே சட்டம் பேசுகிறாயா? பார் இந்த வண்டி ஏலம் போகும் படி செய்கிறேன் என்று கூறி ஆபாச வார்த்தைகளால் அவர்களை திட்டியுள்ளனர். ஒரு காவலர் மதுபாட்டிலுடன் இருச்சக்கர வாகனத்தை பிடிங்கிகொண்டு அங்கிருந்து சென்ற நிலையில், அங்கியிருந்த மற்றொரு காவல் துறையினருடன் மதுபான கடைக்கு வந்து இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரை வெளியேற்றாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் - எஸ்டிபிஐ எச்சரிக்கை

இதனால் அதிர்ந்து போன காவலர் வாகனத்தை எடுத்துச்சென்ற காவலர்க்கு போன் செய்து தன்னை பொதுமக்கள்  சூழ்ந்துக்கொண்டு கேள்வி கேட்பதகாக தெரிவித்ததை தொடர்ந்து, பீர்பாட்டலுடன் வாகனத்தை கொண்டு சென்ற காவலர் இருசக்கர வாகனம் மற்றும். மதுபாட்டில்களை இளைஞர்களிடம் ஒப்படைத்து பொதுமக்களின் நலனுக்காக தான் இப்படி தாங்கள் நடந்துக்கொண்டதாக பம்மினர்.

இச்சம்பவம் காரணமாக டாஸ்மாக் கடை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு மதுபானம் வாங்க வந்த மதுபான பிரியர், பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிகாரத்தை காட்டுவார்கள், இதோ இந்த மதுபான கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் வாங்க கூடாது என்று கூறியும் பத்து ரூபாய் கூடுதலாய் வாங்குவதை கண்டித்து மதுபிரியர் ஒருவர் காவலர்களிடம் முறையிட்டார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த நகர உதவி காவல் ஆய்வாளர் அந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கி துரத்தியது அங்கிருந்தவர்களை அச்சிறுத்தியது.

தென்காசி உள்பட 6 புதிய மாவட்டங்களில் விரைவில் மருத்துவக்கல்லூரி - அமைச்சர் சுப்பிரமணியன்

மேலும் சட்ட விரோதமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் அதிக விலைக்கு மது விற்கும் ஊழியர்களை காவலர்கள் கண்டிக்காமல் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!