ஐஎப்எஸ் நிதி நிறுவன முறைகேட்டில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேரிடம் இருந்து சுமார் 550 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து கொடுத்த முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது வாடிக்கையாளர்களிடம் 7% முதல் 25% வரையில் அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டனர். இந்த நிறுவனம் சுமார் 84 ஆயிரம் பேரிடம் இருந்து சுமார் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை பெற்றுள்ளது. நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி நிறுவனத்தைச் சேர்ந்த 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.1.14 கோடி ரொக்கம், 791 வ்கி கணக்குகளில் இருந்து ரூ.121 கோடி பணம், ரூ.39 கோடியில் அசையா சொத்துகள், 18 கார்கள் உள்ளிட்டவற்றை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
undefined
மதுரை - போடி: வெற்றிகரமாக 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட விரைவு ரயில் சோதனை ஓட்டம்
நிதி நிறுவனத்தின் 4 முக்கிய இயக்குநர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரியான ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஹேமந்தர குமார் ஐஎப்எஸ் நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு 2 ஆயிரம் நபர்களிடம் இருந்து 550 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து கொடுத்தது தெரிய வந்துள்ளர். தொடர்ந்து இவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.