காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் படப்பையில் உள்ள ஒரு கடையில் பிரட் ஆம்லெட், ஜூஸ், பிஸ்கெட், டீ ஆகியவற்றை குடித்துவிட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
படப்பையில் பிரட் ஆம்லெட், ஜூஸ், டீ குடித்துவிட்டு,அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் படப்பையில் உள்ள ஒரு கடையில் பிரட் ஆம்லெட், ஜூஸ், பிஸ்கெட், டீ ஆகியவற்றை குடித்துவிட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
undefined
இதையும் படிங்க;- நடத்தையில் தீராத சந்தேகம்.. காதல் மனைவியை நடுஇரவில் கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?
இதுதொடர்பாக கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படிடையில் தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- அதை சொல்லி சொல்லியே அடித்து உதைத்து டார்ச்சர்! இளம்பெண் செய்த காரியத்தால் கம்பி எண்ணும் கணவர்! நடந்தது என்ன?
இதனையடுத்து, தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.