ரூ.25 லட்சம் வீடு ரூ.6 லட்சத்திற்கு; வயதான தம்பதியரிடம் அடாவடி செய்த ஆருத்ரா முகவர் கைது

By Velmurugan s  |  First Published May 24, 2023, 4:49 PM IST

காஞ்சிபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரூ.6 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு வயதான தம்பதியரை வீட்டை விட்டு காலி செய்ய வற்புறுத்திய ஆருத்ரா நிறுவன முகவரை காவல் துறையினர் கைது செய்தனர்.


ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது.

இதில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்கள், முகவர்கள் என ஏராளமானோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Latest Videos

undefined

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவராக இருந்த நாகராஜ் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெம் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன்(வயது 63) மற்றும் சுகுணா தேவி(59) வயதான தம்பதியினரின் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு  நாகராஜ் மாற்றிவிட்டு, அதில் ரூ.6 லட்சத்தை முதிவயர் ஸ்டீபனின்  வங்கி கணக்கிற்கு செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

32 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே மாதம் ஒரு லட்சம் என ஸ்டீபன் தம்பதிகளுக்கு கிடைத்த நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான காஞ்சிபுரத்தை சேர்ந்த முகவர் நாகராஜ், ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த  நாகராஜ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்த பல சொத்துக்களை விற்க முயற்சித்து வருகிறார்.

அதேபோல் ஸ்டீபன், சுகுணா தேவி வசிக்கும் வீட்டை தனது ஆதரவாளர்கள், அடியாட்களுடன் உள்ளே சென்று வயதான தம்பதியினரின் செல்போனை பிடுங்கி கொண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, வீட்டில் இருந்த பொருட்களை  வெளியே தூக்கி வீசிவிட்டு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி கட்டிடத்தை தூக்கிய போது விபத்து; ஒருவர் பலி, ஒருவர் காயம்

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து  வந்த காஞ்சி தாலுகா உதவி காவல் ஆய்வாளர் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ்யிற்கு சாதகமாக ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த வயதான தம்பதியினரின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் இது குறித்தான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு தலைபட்சமாக செயல்பட கூடாது என அந்த உதவி காவல் ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
இதன் பின்னர்  அங்கு  வந்த காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் பிரேசில் பிரேம் ஆனந்த், வயதான தம்பதியினர் மற்றும் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக வீட்டுக்குள் சென்று வீட்டு பொருட்களை வெளியே வீசியது குற்றம் எனக்கூறி முகவர் நாகராஜ்யையும், விசாரணைக்காக முதியவரையும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயதான தம்பதியினரின் வீட்டிலுள்ள பொருட்களை அடியாட்களுடன் காலி செய்து ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் தூக்கி வெளியே வீசும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரப்பப்பட்டு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட நாகராஜை  காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

பொருளாதார குற்றப்பிரிவுக்கு காண்பிக்காத சொத்துக்களை நிதி நிறுவன முகவர்கள் விற்பனை செய்யும் முயற்சியில்  ஈடுபடுவதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!