காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு குடோனில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு குடோனில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
undefined
இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அடுத்தடுத்த குடோனில் பரவியது. இதனால், கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால், பணியில் இருந்த ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான உடனே தீயணைப்பு துறைக்கு மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது.