சாமி ஊர்வலத்தின்போது ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள விச்சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன் - லதா தம்பதியர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இதில் 3வது மகள் காஞ்சனா என்பவரை சென்னை சேர்ந்த கூலிதொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு லாவண்யா என்ற மகளும் புவனேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சரவணனின் மனைவி காஞ்சனா குடும்ப பிரச்னை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
இதனால் சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா,பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் லாவண்யா 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தம்பி புவனேஷ் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விச்சாதாங்கலில் உள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழாவின் கடைசி நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமி லாவண்யா மாட்டுவண்டியின் பின்புறம் அமர்ந்து, ஆசையுடன் திருவிழாவை ரசித்து பார்த்தபடி சென்றபோது திடீரென மாட்டுவண்டியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது.
சிறுமியின் சத்தத்தினை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தினை நிறுத்தி சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..2022ல் 11,000 பேர்.. 2023ல் 10,000 பேர் - ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் மெட்டா நிறுவனம்