காங்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கம்பி விழுந்து விபத்து ஏற்பட்டதில் வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அடுத்த மேல் சிறுனை கிராமத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் வீடு கட்டுவதற்காக தனக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தார். அதன்படி ஆள்துளை கிணறு அமைக்கும் குழுவினர் கோடீஸ்வரன் தெரிவித்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குழுவாக வந்த தொழிலாளர்கள் அனைவரும் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் இருந்து பெரிய அளவிலான இரும்பு குழாய் ஒன்று கீழே விழுந்துள்ளது. அப்போது அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேக்ராம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.
undefined
நீலகிரியில் பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; உறவினர் துணீகரம்
இந்த விபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மேக்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கவனக்குறைவாக பணியாற்றியதாகக் கூறி ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரியின் உரிமையாளர், லாரியின் ஓட்டுநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.