காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோஸ்ச்சவத்தின் 9-ஆம் நாளில் பிரசாதம் வழங்குவதில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு இருபிரிவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில், காலையிலும் மாலையிலும் யார் பிரபந்தங்களைப் பாடுவது என்பதில் அந்தக் கோவிலோடு தொடர்புடைய வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை பிரிவினர் மற்றும் தென்கலை பிரிவினர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளில் இந்த மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது.
இந்த நிலையில் கடந்தாண்டு நடவாவி கிணறு உற்சவத்தின் போது நடைபெற்ற மோதல், இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவத்தின் பொழுது நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவம் விழாவானது மே மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் மூன்றாம் நாளான 2ஆம் தேதி காலை கருட சேவை உற்சவம், அதனை தொடர்ந்து இரவு ஹானுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றது. மழையின் காரணமாக திருக்கோவிலிருந்து சுமார் 8 மணிக்கு மேலாகவே வீதியுலாவானது நடைபெற்றது. திருக்கோவிலிருந்து வடகலை பிரிவினரின் வேத பாராயணங்கள் முழங்க வந்து சங்கரமடம் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில், மண்டகபடியாக கண்டருளி பட்டாட்சாரியர்களின் வேத பாராயணங்களும் பாடப்பட்டது . அப்போது வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே வேத பாராயணம் பாடிய போது சிறு சலசலப்பு ஏற்பட்டு நித்தயபடி பூஜைகளும் நடைபெற்றன.
undefined
“ என்ன ரோடு இது? என் வண்டி வந்தாலே தாங்காது” அதிகாரிகளை கண்டித்த மதுரை ஆட்சியர்..
சாமிக்கு நெய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதமானது வழங்கும்போது, வடகலை பிரிவினரே வேத பிராயணம் பாடியபடி வந்த நிலையில் எதற்காக தென்கலை பிரிவினருக்கு வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவை இருதரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளுவாக மாறி வீடியோ எடுத்த செல்போன்கள் தட்டிவிடப்பட்டு செல்போன்கள் பரந்தன.
இதனால் அந்த இடத்தில் கூச்சல் குழப்பமானது ஏற்பட்டு பகதர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு சிலர் சாமி தரிசனம் செய்திட முடியாது புறப்பட்டும் சென்றனர். இதனையெடுத்து சுமார் 1 மணிநேர வாக்குவாத தள்ளு பிரச்சனைக்கு பின் பின் களைந்தனர். இதனால் மண்டபடி எழுந்தருளிய இடத்தில் கால தாமதமாகி சற்று தாமதமாகவே சாமி புறப்படாகி நள்ளிரவில் திருக்கோவிலை சாமி சென்றடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.அன்றைய இரவே பிரபந்தம் பாடிய நபர்களுக்கு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் தோசையை பெற்றுக் கொள்வதிலும் இரு தரப்பினர் இடையே சண்டை நடைபெற்று உள்ளது.
இதனை அடுத்து நேற்று இரவு புண்ணியகோடி வாகன உற்சவம் நடைபெற்றது. இந்த உச்சகத்திற்குப் பிறகு பாசுரங்களை பாடிவரும் தென்கலை பிரிவினர், நம்மாழ்வாருக்கு பெருமாளின் சடாரி வைத்து மரியாதை செய்வது வழக்கம். ஆனால் அவற்றை செய்யவிடாமல் பெருமாளின் சடாரியை வடகலை பிரிவின தள்ளி விட்டதாக கூறி தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்கலை பிரிவை சேர்ந்த கூறுகையில், மணியக்காரர் உதவியுடன் தென்கலை பிரிவினர் அவமதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று கூட சாமியின் சடாரியை தள்ளிவிட்டு பிரச்சினைகள் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக வடகலை பிரிவை சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில், சாமிக்கு எந்தவித பணிகளையும் செய்யாமல் பிரசாதங்கள் மற்றும் உரிமைகளை மட்டும் தென்கலை பிரிவினர் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து மணியக்காரர் இவ்வாறு செய்யக்கூடாது என தெரிவித்தும் மோதலில் ஈடுபட்டதால் இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த பத்து நாள் நடந்த பிரம்மோற்சவம் விழாவில் காலை மற்றும் மாலை என இருபது வேலைகளிலுமே தொடர்ந்து தென்கலை பிரிவினர் தங்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிவித்தார்.