காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். 51 வார்டுகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவுக்கு 33 உறுப்பினர்களும், விசிக, காங்கிரஸ் தலா 1 உறுப்பினர் என ஆளும் கட்சிக்கு 35 உறுப்பினர்களின் பலம் உள்ளது. மேயர் மீதான அதிருப்தியின் விளைவாக மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
குறையே சொல்ல முடியாத ஆட்சியா? குறைய தவிர எதையுமே சொல்ல முடியலயேப்பா - சீமான் ரைமிங் அட்டாக்
undefined
இந்த தீர்மானத்தின் மீது இன்று (திங்கள் கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிருப்தி மாமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் 10 பேர் என மொத்தமாக 33 உறுப்பினர்கள் சுற்றுலா சென்றது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பணிக்காக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் காலை 10 மணி முதல் காத்திருந்தார். ஆனால் அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்கள் உட்பட யாருமே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது. வாக்கெடுப்பு ரத்தானதால் நம்பிக்கை இல்லா தீர்மானமும் ரத்தாவதாக ஆணையர் செந்தில் முருகன் அறிவித்தார்.
இதனிடையே தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகக் கூறி மேயருக்கு எதிராக களம் இறங்கிய மாமன்ற உறுப்பினர்கள் திடீரென ஏன் மாயமானார்கள்? நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.