காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதால் பரபரப்பு.
2022ம் ஆண்டு நடைபெற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலுக்கு பின்னர் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரர் துணை மேயராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மேயருக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.
undefined
இந்நிலையில் மேயர் மகாலட்சுமி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளளது. இதனிடையே மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேயர் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 10 பேரும் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரம்! காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! தலைமறைவான பிரபல ரவுடி!
51 வார்டுகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவில் 33 உறுப்பினர்களும், விசிக, காங்கிரஸ் தலா 1 உறுப்பினர் என ஆளும் கட்சிக்கு 35 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் மேயருக்கு எதிராக திமுக 17, அதிமுக 8, பாமக 2, சுயேட்சை 4, பாஜக 1, தமிழ் மாநில காங்கிரஸ் 1 என மொத்தம் 33 பேர் உள்ளனர்.