தேவாலயத்தில் சிறுமியிடம் இரக்கமின்றி அத்துமீறிய பாதிரியார் இரக்கம்; முதல்வரின் தனிபிரிவுக்கு பறந்த புகார்

By Velmurugan s  |  First Published Jul 4, 2024, 2:41 PM IST

காஞ்சிபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன‌ காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் காலம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பார்த்த எங்களுக்கு “விஜய் ஒரு சுண்டைக்காய்” - அர்ஜூன் சம்பத் காட்டம்

Tap to resize

Latest Videos

undefined

அப்போது சிஎஸ்ஐ சர்ச்சில் பாதிரியாராக இருந்துவரும் தேவஇரக்கம் இரவு நேரத்தில் சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது அங்கிருந்து கத்தியபடி சிறுமி வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு இந்த சிறுமியை பாதிரியார் பாலியல் துன்புறுத்தியது கசிந்திருக்கிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தகவல் அறிந்து இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இம்மனு வந்த நிலையில், புகார் குறித்து விசாரித்து உண்மை நிலையை அறிந்த நிலையில் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருச்சியில் 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை? குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் துணிகரம்

அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!