ஓபிஎஸ்.ன் சுயேச்சை முடிவுக்கு காரணம் என்ன? சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றபின் தினகரன் சொன்ன தகவல்

By Velmurugan s  |  First Published Mar 22, 2024, 6:56 AM IST

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற சட்டப்போராட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருவதால் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருக்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ சங்கர மடம். இதன் பிடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலங்களுக்கு யாத்திரை பயணம் மேற்கொண்டு நேற்று மாலை மீண்டும் சங்கர மடம் திரும்பினார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 7 மணி அளவில் சங்கரமடத்திற்கு வருகை புரிந்தார்.

அவர் ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள், ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் அனுஷ்டானத்தில் நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்ட பின்பு ஸ்ரீ விஜயேந்திரரை தனது மனைவி அனுராதா, அமுமுக நிர்வாகி கரிகாலன் ஆகியோருடன் சந்தித்தார். ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளிடம் குடும்பத்துடன் ஆசி பெற்று 30 நிமிடங்கள் அவருடன் உரையாடினர்.

Tap to resize

Latest Videos

undefined

15 தொகுதி கேட்டோம்... பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்றொரு கட்சியின் சின்னத்தில் அவர் போட்டியிட்டால் அது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார் என தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக தொகுதி பங்கீடு விவரம் வெளியீடு; 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டி!

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார். மேலும் கடந்த 1990 நாடாளுமன்றத் தேர்தலின் போது காஞ்சியில் நடைபெற்ற  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைவரையும் அறிமுகப்படுத்தி பிரசாரத்தை துவக்கினார். அதன்பின் தன்னை காஞ்சி சங்கரமடம் சென்று சங்கராச்சாரியார் சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்று வருமாறு தெரிவித்ததை தொடர்ந்து இன்று வரை காஞ்சி மடத்திற்கு வந்து செல்வதாக தெரிவித்தார்.

click me!