செங்கல்பட்டு அருகே அதிவேகமாக வந்த சட்டக்கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனம் எதிரே வந்த வாகனம் மீது மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர், சாலையில் நடந்து சென்றவர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், கோகுல கண்ணன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சதீஷ் ஆகிய மூன்று பேர் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து மேலமையூர் நோக்கி அண்ணா நகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர்.
கரூரில் போதை ஊசி தயாரித்து மாணவர்களுக்கு விற்பனை; 6 பேர் அதிரடி கைது
அப்போது திருமணி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நந்தகோபால் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சட்டக் கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் நந்தகோபாலின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் அதே நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மேஸ்திரி தணிகாசலத்தின் மீது இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதின. இந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ் (21), மேஸ்திரி தணிகாசலம் (46) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சாய் கிருஷ்ணன், கோகுல், பெயிண்டர் நந்தகோபால் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேறு நபருடன் பழக்கம்; அண்ணியை வெட்டி கொன்ற வாலிபர் கைது - தூத்துக்குடி அருகே பரபரப்பு
தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு நகர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.