உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினர்களுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினர்களுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
undefined
இதையும் படிங்க;- பொங்கல் விடுமுறை முடிந்து தலைநகரை நோக்கி படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துபோன சென்னை.!
பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை வெயில் வரதராஜ பெருமாள் மீது படும்படி மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார். மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.
இதையும் படிங்க;- சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 160 பேர்.! நடந்தது என்ன?
இநிலையில் நேற்று பழையசிவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தின் போது பிரபஞ்சம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் திடீரென கைகளைப்பாக மாறியது. இதனையடுத்து ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை ,தென்கலை பிரிவினர் இடையே அடிதடி சண்டை நடந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வடகலை தென்கலை பிரிவினருடைய பிரபஞ்சம் பாடுவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.